ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மகனுக்கு அரிவாள் வெட்டு.
ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவராக அய்யாதுரை (67) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் அய்யாதுரை மற்றும் அவரது மகன் கலாநிதி (40) ஆகிய இருவரும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே இருந்துள்ளனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித் (32) என்பவர் குடிபோதையில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரஞ்சித் அரிவாளால் அய்யாதுரை மற்றும் கலாநிதியை தாக்கியதில் அய்யாதுரைக்கு வலது தோள்பட்டையில் லேசான வெட்டு காயமும், கலாநிதிக்கு வலது முழங்கால் மற்றும் இடது காலில் வெட்டு காயமும் ஏற்பட்டது.
தொடர்ந்து காயம் அடைந்த பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை மற்றும் அவரது மகன் கலாநிதி ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் விரைந்து சென்று ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
அரிவாள் கலாச்சாரம் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு தூத்துக்குடி மாவட்டம் காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.