காரணம்பேட்டை பகுதியைச் சுற்றிலும் ஒரு சில கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர் ,பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஜல்லி, ஜல்லி மண் போன்ற மூலப் பொருட்கள் கட்டிடம் கட்டும் பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
தினந்தோறும் தோராயமாக சுமார் 50 முறை இந்த டிப்பர் லாரிகள் 150 முதல் 250 அடி ஆழம் வரை உள்ள குவாரியில் உள்ளே இறங்கி உடைந்த பாறைகளை ஏற்றிக் கொண்டு வருவது தான் டிப்பர் லாரி ஓட்டுனரின் வேலை. இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு வேலை என்று தெரிந்தும் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வேலையை செய்து வருகின்றனர்.
காரணம்பேட்டை அருகில் உள்ள ஒரு கல் குவாரியில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அந்த வாலிபர் லாரியை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது நிலை தடுமாறி 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் பாகங்கள் தூள் தூளாக போய்விட்டது . மேலும் லாரி என்ஜின் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விரைவாக ஓட்டுநரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைக்கு பலன் இன்றி ஓட்டுநர் உயிர் பிரிந்தது. இது அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாட்ஷா. திருப்பூர்.