காரில் சென்றவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு! அடாவடி ஆய்வாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள வெள்ளையாபுரம் என்ற ஊரில் நிகழ்ந்த ஒரு துக்கத்திற்காக தனது மூத்த வழக்கறிஞர் மற்றும் நண்பர்கள் என நான்கு பேருடன் காரில் வந்திருக்கிறார். Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே அன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, கேணிக்கரை காவல் நிலையத்தில் அப்போது ஆய்வாளராகப் பணியாற்றிய சிலைமணி, வழக்கறிஞர் சிவன்ராஜ் வந்த காரை வழிமறித்து ஆவணங்களை பரிசோதித்திருக்கிறார். அதில் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும், காரில் வந்த சிவன்ராஜ், ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் காரில் இருந்த முகமது யாசிர் என்பவரை மூர்க்கமாகத் தாக்கியிருக்கிறார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
அவசரமாகச் சென்றதால் வேறு வழியில்லாமல் அவரிடம் இரண்டாயிரம் ரூபாயை அபராதமாகக் கொடுத்து அதற்கு ரசீது கேட்டிருக்கிறார், சிவன்ராஜ். ஆனால், ஆய்வாளர் சிலைமணி ₹.100க்கு ரசீது போட்டு கொடுத்திருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவன்ராஜையும், அவருடன் வந்தவர்களையும் தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் அவதூறாக பேசியுள்ளார் எனவும் வழக்கறிஞர் சிவன் ராஜ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து சிவன்ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தார். நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்ததில், ஆய்வாளர் சிலைமணி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆய்வாளர் சிலைமணி, நான்கு வாரக்காலத்துக்குள் வழக்கறிஞர் சிவன்ராஜூக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக வழங்க வேண்டுமென்றும், விதிமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் சிலைமணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலைமணி தற்போது தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp