தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அரியநாயகிபுரம் சுற்றியுள்ள கிராமங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பொழியாமல் விவசாய நிலங்கள் மழைக்கு ஏங்கி வருவதை மக்கள் மனவேதனையுடன் கண்டனர்.
அரியநாயகிபுரம் ஜமாத்தார்கள் ஒன்று கூடி இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோம் என்று முடிவு எடுத்ததில், இன்று காலை சிறப்பாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்தப் பிரார்த்தனையில் அரியநாயகிபுரத்தில் உள்ள முதியோர்களும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு மனம் உருகி பிரார்த்தனை செய்ததில் இறைவனின் அருளால் உடனடியாக மலை பொழிந்ததில் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த பிரார்த்தனையில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா.