குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதம் ஏன்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்!!

பொது மக்கள் நிண்ட நாள் கோரிக்கை தேர்வு முடிவுகள் ஆன்லைன் வெளியீடுகள் உடனடியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும். இப்போது தேர்வுகள் அனைத்தும் கணினி முறைமையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp