குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள கால்வாய்களில் வெயில் காலத்திலும் மழை காலத்திலும் அதே நிலை!!!!

தாம்பரம் மாநகராட்சியின் அஸ்தினாபுரம் ஆர்.பி. ரோட்டை கடக்கும் கால்வாய். இந்த கால்வாய் தெற்கு பகுதியில் வார்டு 37, எம்.டி.எல்.பி நகர் பகுதியிலும், 36 வார்டில், ராகவா நகர், பி.பி.ஆர் நகரின் பெரும் பகுதியிலும் சென்று நெமிலிச்சேரி ஏரிக்கு செல்லும் கால்வாயுடன் இணைகிறது.

இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழித்தடங்கள்/கால்வாய்களை உள்ளாட்சி அமைப்புகள் (பல்லாவரம் நகராட்சி தற்போது தாம்பரம் மாநகராட்சி) இவற்றை மழை நீர் கொண்டு செல்லும் தளங்களாக பயன்படுத்தாமல் அவற்றை குப்பை கொட்டுவதற்கும் கழிவு நீர் செல்லும் தளங்களாக மாற்றி அமைக்க உறுதுணை புரிகின்றன. (பெரும்பாலான இடங்களில் வாய்க்கால்களை அவற்றின் முழு அகலத்திற்கு தடுப்பு அமைக்காமல் பாதி அல்லது முக்கால் வாசிப்பகுதிக்கு தடுப்பு அமைத்து மீதமுள்ள இடத்தை பக்கத்தில் உள்ள மனை உரிமையாளர்கள் ஆக்கிரமிக்க ஏதுவாக அமைத்து தருகிறார்கள்)


மாநகராட்சி ஆக தரம் உயர்த்தி ஒரு வருடம் ஆன நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே நடைபெற்ற தவறுகளை திருத்தி, இந்த நீர் வழித்தடங்களை எல்லாம் அதன் முழு கொள்ளளவுக்கு மீண்டும் கொண்டுவந்து, குப்பைகளும் கழிவு நீரும் இல்லாத நீர் வழித்தடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp