அங்கலக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே போட்டிகள் வைத்து கொண்டாட்டம்…!!!
கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், சந்திப்போம் பாசிட்டிவ் வெல்பேர் சொசைட்டி, ஆல் தி சில்ட்ரன் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கலகுறிச்சியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பசுமை குரல் அமைப்பினர் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மரகன்றுகளை நடவு செய்தார்கள்.
நாளை வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.