கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியை சேர்ந்த மறையூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட காந்தளூர் என்ற பகுதியில் இருந்து தினமும் மரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தொடர்ந்து கேபிள் வயர்களை துண்டித்து செல்லுகின்றன. இதனால் வங்கிகள், காசோலைகளை பரிமாற்றம் செய்யும் சேவை மையங்கள் மற்றும் இதர பயன்களை கடைகளுக்கும் வீடுகளுக்கும் அளிக்கும் தொலை தொடர்பு சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாததால் மக்களின் அன்றாட செயல்கள் நின்று விடுகின்றன.
பலமுறை இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட காரணம் அரசு அனுமதித்ததை விட அதிகமான சுமைகளை ஏற்றி வருவது தான் காரணம் என பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். பலமுறை அரசிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பது அனைத்து பயன்பெறும் மக்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றன.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கேபிள் டிவி ஆபத்து ஆபரேட்டர் சங்கம் சார்பாக மறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளன. அரசு இதற்கான தீர்வை சீக்கிரத்தில் காண வேண்டும் என்று மக்களின் எதிர்பார்ப்பு
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்.
மூணார்.