கோயம்புத்தூர்,நீலகிரி ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் திரு.செல்வமுத்துகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரயில் நிலையம் அருகில் உள்ள SP OFFICE பின்புறம் உள்ள தோமஸ் ஹாலில் வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது.
ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும் தேர்வு முறையானது1. எழுத்து தேர்வு 2. தொழில்நுட்ப தேர்வு 3. மனிதவளத்துறை நேர்காணல் 4. கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப தேர்வு 5. சாலை விதிகளுக்கான தேர்வு .அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் BSc Nursing, GNM, ANM , DMLT (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது life science BSc Zoology , Botany Bio- Chemistry ,Micro biology ,Bio technology இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் மாதம் ஊதியம் ரூபாய்15,435(மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் தேர்வு முறையானது 1. எழுத்துத் தேர்வு 2. மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் மேலும் விவரங்களுக்கு 7397444147,7497724827,7397724837,9154188424 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு இவ்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.