கோவையில் தெய்வேந்திரன் நாடார் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனரும், கோவை நாடார் சங்க முன்னாள் தலைவருமான ஆர்.தெய்வேந்திரன் நாடார் 77-வது பிறந்தநாள் விழா ஆர்.எஸ். புரத்தில் உள்ள தேவேந்திரன் ஹவுஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்
தெய்வேந்திரன் நாடார் திரு உருவப்படத்திற்கு ரத்னமாலாராஜேஷ் குமார், கலைச்செல்வி தெய்வேந்திரன , அகிலேஷ்குமார்,ராஜேஷ் குமார், மாஸ்டர் ஆதித்யா ராஜேஷ் குமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் 750 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலணிகள்,கையுறைகள்,உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதே போல கண்பார்வையற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 100 பேருக்கு இலவச அரிசி பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்,கோவை கணுவாய் ரோட்டில் உள்ள எலியா ஹோம்’காப்பகத்தில் உள்ள 100 பேருக்கு அசைவ விருந்து உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக ரத்னமாலா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடார் மகாஜனசங்கம் கோவை மாவட்ட செயலாளர் டி.சி. விஜயகுமார், இந்து நாடார் பேரவை நிறுவனதலைவர் வி.வி.முருகேச பெருமாள், மாநில துணைச் செயலாளர் சௌந்தர்,மாவட்ட பொருளாளர் திருமுருகன், ஆர்.பி.கருணாகரன்,தெய்வேந்திரன் நாடார் நற்பணி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஐயம்பெருமாள், தர்மராஜ் பட்டுராஜ், தனசேகரன் ராதாகிருஷ்ணன், செல்வகுமார் மார்சல், இசக்கி காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.