கோவையில் நவம்பர் 27ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் இசை கச்சேரி!

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை கச்சேரி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அன்னபூர்ணா மசாலா வழங்கும் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை கச்சேரி கோவையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாலை 6 மணி அளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு 30,ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொடிசியா மைதானத்தில் கவரவுள்ளது.இதில் சர்வதேச இசைச்சேரிகளுக்கு இணையாக நடத்திட முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.சித் ஸ்ரீராமுடன் அவருடைய இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோசிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்படஉள்ளது.

இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று ஆடும்’பேன் பிட் இடம்பெருகிறது 10ஆயிரம் பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் இருக்கும்.ரசிகர்களுடன் அவ்வப்போது சித் ஸ்ரீராம் உரையாடல் இருக்கும்.இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

டிக்கெட்டுகள் PAYTM INSIDER, BOOK MY SHOW, VMR GROBUX, ரோட்டரி கேலக்ஸ்சி சங்கத்தில் கிடைக்கும். அத்துடன் அன்னபூர்ணா, ஆனந்தாஸ் ஆகிய பிரபல உணவகங்களில் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்திலூம் கவுண்டர்கள் இடம்பெறும் அங்கு பெற்றுக்கொள்ளலாம்.

ரூ. 500 முதல் ரூ. 25,000 வரை டிக்கெட்டுகள் உண்டு.அருண் ஈவென்ட்ஸ், வி 2 க்ரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஒருங்கிணைத்து நிகழ்வை நடத்துகின்றனர். எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்கள், ஸ்கோடா.எஸ்.ஜி.ஏ கார்ஸ், லட்சுமி செராமிக்ஸ் மற்றும் வசந்த் &கோ நிறுவனம் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளதாக தெரிவித்தனர்.

– சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp