கோவை ஆகஸ்ட் 23, 2022 அன்று நடந்த கார் குண்டு வெடிப்புக்கு வெடிப்பொருட்களை ஆன்லைன் வழியில் ஜமேஷா முபின் கொள்முதல் செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் நிறுவனங்களின் அலுவலர்கள், டெலிவரி செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கூரியர் ஏஜென்சி நடத்துபவர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில்:-
ஆன்லைன் நிறுவனங்களின் வேதிப்பொருள் விற்பனையை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது. குறிப்பிட்ட சில வேதிப் பொருட்களை தனித்தனியாக வாங்கி அவற்றை ஒன்று சேர்த்து வெடி பொருட்களாக மாற்றி விடுகின்றனர். குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் பார்சலில் வந்தாலோ, பார்சல் மீது சந்தேகம் வந்தாலோ,
யாருக்கும் சம்பந்தமில்லாத பார்சல் வந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
-M.சுரேஷ்குமார்.