கோவை குறிச்சிபிரிவு வியாபாரிகள் நலசங்கத்தின் முப்பெரும் விழா நேற்றுவெள்ளிக்கிழமை மாலை6:30 மணியளவில் வசந்தம் ஹாலில் தலைவர். M_கிதர்_முஹம்மது தலைமையில் நடந்தது.
முதலாவதாக நமது சங்கத்தின்உறுப்பினர் இரண்டு பேர் மரணித்து விட்டவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை குறிச்சி பிரிவு வியாபாரிகள் நல சங்கத்தின் கௌரவ_ஆலோசகர். ஹாஜி இஸ்மாயில் பாய். அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தலைவர் M_கிதர்_முஹம்மது அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.அடுத்ததாக செயலாளர்
காதர் மைதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் ராம்மோகன். அவர்கள் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இணைச் செயலாளர் செல்லப்பா.. (எ) செய்யது_இபுராஹிம். அவர்கள் ஆரம்பம் முதல் இன்று வரை சங்கம் கடந்து வந்தபாதை என்ற
தலைப்பில் தொகுத்து வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ஆடிட்டர் அபுதாஹிர் அவர்கள். ( ஜி.எஸ்.டி.) பற்றி விவரித்தார். சங்கத்தின் துணைத் தலைவர். ஹாஜி\ முகம்மது_இலியாஸ். அவர்கள். சங்கம் வளர்ச்சி குறித்து சிறிய உரை நிகழ்த்தினார்.
துணைச் செயலாளர். சன் டிரேடர்ஸ் இபு (எ) இப்ராஹிம். அவர்கள். வருங்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும் செயற்குழு, மற்றும் நிர்வாக_குழு, உறுப்பினர்கள். அனைவரும் தல ஐந்து நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் நாள்காட்டி களை வழங்கினார்கள். இறுதியாக சங்கத்தின் கௌரவ ஆலோசகர். ஹாஜிஇஸ்மாயில் அவர்களுக்கு சங்கத்தின் மூத்தஉறுப்பினர்கள். சான்றிதழ், மற்றும் நாள்காட்டி வழங்கி கௌரவித்தார்கள்.
இக்கூட்டத்துக்கு 138 பேரில் 108_பேர் கலந்து கொண்டு இவ்விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் நன்றி சொல்லி கூட்டத்தை நிறைவு செய்வதாக இணைச்செயலாளர் செல்லப்பா(எ)செய்யது இப்ராஹீம் தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.