சிங்கம்புணரி – திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமது மைதீன். இவரது கடையின் பணியாளர், இரு தினங்கள் முன்பு காலையில் கடையைத் திறந்த போது, உள்ளே கல்லாப்பெட்டி அருகில் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்திருக்கிறது. அதிலிருந்த ₹.5 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. நள்ளிரவு நேரத்தில் கடையின் பின்புறம் உள்ள தகரத்தை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பணத்தை திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், சிங்கம்புணரி வேளார் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்தழகு(வயது22), இரும்புக் கடையில் திருடியது தெரியவந்தது.
இன்று காலை அவரை கைது செய்வதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது பெரியார் நீட்டிப்புக் கால்வாயில் விழுந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து, இன்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ₹.2000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு, சிங்கம்புணரி நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன் முத்தழகு நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.