சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில்
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.
நேரு தலைமையில் சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் கோட்டகவுண்டம்பட்டியில் இருக்கும் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை நவம்பர் 26 சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
நாளை நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முகாமில் உற்பத்தி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும், 20,000 க்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி ஓய்வு பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், பல தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு, பல்வேறு கல்வி தகுதிகளை உடைய காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன, மகளிருக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன இம்முகாமில், Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் கீழ்காணும்
http://www.tnprivatejobs.tn.gov.in, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முகாமிற்கு புறப்படும் முன் மறக்காமல் வீட்டில் இருந்த எடுத்து வரவேண்டியது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச் சான்றிதழ் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்பு (RESUME OR BIODATA) ஆகியவற்றை முகாமிற்கு எடுத்து வரவேண்டும். வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது மேலும் சேலத்திலிருந்து ஓமலூர் மார்க்கம் வழியாக செல்லும் அனைத்து நகர மற்றும் புறநகர் பேருந்துகளும் ஓமலூர் சுங்கச்சாவடியில் நிற்கும்
நாளைய வரலாறு செய்திக்காக,
-ச.கலையரசன் மகுடஞ்சாவடி.