தூத்துக்குடி: மாணவி ஒருவர், பள்ளி மாடியில் இருந்து விழுந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது மாணவிக்கு? தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில், தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு விடுதி வசதியும் இருக்கிறது..
அந்த விடுதியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தங்கிபடித்து வருகிறார்.. என்ன காரணம் என்று தெரியவில்லை, திடீரென அந்த பெண் ஹாஸ்டலில் தங்கவில்லை.
ஒருமாத காலமாகவே, வீட்டில் இருந்து, ஸ்கூலுக்கு போகும்படி அவரது பெற்றோர் சொல்லி உள்ளார்கள்.. அதனால் சிறுமியும் ஹாஸ்டலில் தங்காமல், இந்த ஒரு மாதமாகவே, வீட்டிலேயே தங்கியிருந்து ஸ்கூலுக்கு போய் வருகிறார்.. “ஜன்னலோரம்” நின்ற கருப்பு உருவம்.. அப்படியே மலைத்து பார்த்த பெண்.. வெலவெலத்த போலீஸ்.. ஏன் தெரியுமா தூத்துக்குடி: மாணவி ஒருவர், பள்ளி மாடியில் இருந்து விழுந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது மாணவிக்கு?
காலில் வடிந்த திரவம்.. அப்படியே ரத்தத்தில் கலந்து.. மாணவி பிரியா பலியானது எப்படி? நடந்தது என்ன? காலில் வடிந்த திரவம்.. அப்படியே ரத்தத்தில் கலந்து.. மாணவி பிரியா பலியானது எப்படி? நடந்தது என்ன?
விளையாட்டு ஹாஸ்டல் இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் சக மாணவிகளுடன் சிறுமி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தார்.. பிறகு திடீரென அந்த மாணவி மட்டும், மைதானத்தில் இருந்து வேகவேகமாக நடந்து பள்ளியின் முதல் மாடிக்கு சென்றார்.. அங்கே பால்கனியில் இருந்து டக்கென கீழே குதித்துவிட்டார்.. இதனால், மாணவிக்கு உடம்பில் பலமான அடிபட்டது.. வலியால் அலறி துடித்தார்.. இதையடுத்து, அவரை ஆட்டோவில் ஏற்றி ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. மாணவியின் 2 கால்களுமே உடைந்துவிட்டது தெரியவந்தது.. 2 கால் எலும்புகளிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது.
எனவே மேல்சிகிச்சைக்காக, நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சையும் ஆபரேஷனும் செய்யப்பட்டது.. இது தொடர்பாக சாயர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்களும் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்… அப்போது மாணவி அப்பா சொன்ன தகவல், போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது.. ஏதோ ஒரு கருப்பு உருவம் மாணவி பின்னாடியே வருகிறதாம்.. எங்கே போனாலும் வருகிறதாம்.. மாணவியுடன் பேசுகிறதாம்.. அந்த கருப்பு உருவத்தை பற்றி மாணவி வீட்டில் சொல்லி உள்ளார்.. அதோ அங்கே கருப்பு உருவம் நிற்கிறது என்று கை நீட்டி காட்டுவாராம்.. ஆனால், அங்கே யாருமே இருக்க மாட்டார்கள் என்றார்.
இதனால் குழம்பி போன போலீசார், மாணவியிடமே விசாரித்துள்ளனர்.. மாணவியும் சம்பவத்தன்று நடந்ததை விவரித்துள்ளார்.. மைதானத்தில் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது, மைதானத்துக்கே அந்த கருப்பு உருவம் வந்துவிட்டதாம்.. என் பின்னாடி வா என்று மாணவியை அழைக்கவும், இவரும் பின்னாடியே சென்றுள்ளார்.. அந்த கருப்பு உருவம், பள்ளியின் முதல் மாடிக்கு அழைத்து சென்றுள்ளது.. அங்கே பால்கனியில் நின்றுகொண்டு, நாம ரெண்டு பேரும் கீழே குதிச்சு குதிச்சு விளையாடலாம் என்று சொல்லி உள்ளது.. அதன்படியே மாணவியும் கீழே குதித்துள்ளார்.. அதற்கு பிறகுதான் தெரிந்தது, அந்த கருப்பு உருவம், கீழே குதிக்காமல் சிறுமியை ஏமாற்றிவிட்டதாம்..
சிறுமி கருப்பு உருவம் போலீசார் சிறுமியை விசாரித்து கொண்டு இருக்கும்போது, அதோ பாருங்க, ஜன்னல்கிட்ட அந்த உருவம் நிக்குது.. ஜன்னல்கிட்ட இருந்து என்னை கூப்பிடுது பாருங்க என்றாராம்.. இதை பார்த்து போலீசார் ஆடிப்போய்விட்டனர்.. அங்கே ஜன்னலில் எந்த உருவமும் இல்லை… அதேசமயம், இந்த வழக்கை எப்படி டீல் செய்வது என்று தெரியாமல் தடுமாறினர்.. எந்த பிரிவில் வழக்கை பதிவு செய்வது என்றும் அவர்களுக்கு புரியவில்லை.. பிறகு கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளனர்.. கோர்ட்டிலும் இதே கருப்பு உருவத்தை பற்றி மாணவி அதிர்ச்சி விலகாமல் சொல்லி உள்ளார்.
முதல் மாடி இறுதியில், தற்கொலைக்கு முயன்றதாக 308-ம் சட்டப்பிரிவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. பிறகு, உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று, மாணவியின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங்கும் வழங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.. இப்போது விஷயம் என்னவென்றால், அந்த கருப்பு உருவம் பற்றின விஷயம், சக மாணவிகளுக்கு தெரிந்துவிடவும், பீதியில் உள்ளனர்.. ஹாஸ்டல் மாணவிகள் அதற்கு மேல் கலங்கி உள்ளனர்.. அதிலும் அந்த முதல் மாடி???!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.