தமிழகத்தில் முதன்முறையாக டைப்-1 சர்க்கரை நோய் நோயாளிகளுக்கு இலவச குளுக்கோமீட்டர் வழங்கும் திட்டம் துவக்கம்!!

கோவை ஏ.ஜி.எஸ்  ஹெல்த் கேரில், தமிழகத்தில் முதன்முறையாக டைப்-1 சர்க்கரை நோய் நோயாளிகளுக்கு இலவச குளுக்கோமீட்டர் வழங்கும் திட்டம் துவக்கம்.

உலக சர்க்கரை நோய்தினத்தை அனுசரிக்கும் விதமாக  கோவைஏ.ஜி.எஸ்  ஹெல்த் கேரில், தமிழகத்தில் முதன்முறையாக டைப்-1சர்க்கரை நோய்நோயாளிகளுக்கு இலவசகுளுக்கோமீட்டர் வழங்கும் திட்டத்தை  ஏ.ஜி.எஸ்  ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன்மற்றும் தி தோல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜனனி ஆதித்யன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இது குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில், “டைப்-1 சர்க்கரை நோய்வழக்கமான சர்க்கரை நோயை விட முற்றிலும் வேறுபட்டது. உடல் எவ்வாறு ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையை உபயோகிக்கிறது என்பதை நிர்வாகம் செய்யக்கூடிய முக்கிய ஹார்மோன் தான் இன்சுலின். இதுஒருவரின் கணையத்தில் இருந்து உற்பத்தியாகிறது.  டைப்-1 சர்க்கரை நோய் உடையவர்களுக்கு கணையத்திலிருந்து இன்சுலின் என்பது உற்பத்தியே ஆவதிலேயே பெரிய பிரச்சனை இருக்கும். கணையத்தில் ஆல்பாசெல், பீட்டா செல் என்று இருசெல்கள் இருக்கும். இந்த பீட்டா செல்லில் இருந்து தான் இன்சுலின் என்பது சுரக்கும். அந்தஇன்சுலின் ஹார்மோனிலேயே பேசல் இன்சுலின், போலஸ்இன்சுலின் என்றுஇரு வகைகள் இருக்கும்.சிலர் உடம்பில் இந்த இன்சுலினை உருவாக்கக்கூடிய செல்களை உடலின் எதிர்ப்பு சக்தியே ஏதோ சிலமரபணு சம்பந்தப்பட்ட காரணத்தால் தாக்கும். அதன்விளைவாக இன்சுலின் சுரப்பதில்  கோளாறு ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டு உடலில் இருக்கக்கூடிய இரத்தசர்க்கரை அளவைகட்டுப்படுத்த முடியாமல் போவதை டைப் 1 சர்க்கரை நோயாக பார்க்கின்றோம்.இதில் சோகம்என்னவென்றால், இந்தவகையான மரபணுகாரணத்தால் ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய்பிறந்ததிலிருந்து 30 அல்லது 35 வயதுக்குள்ளே ஏற்படக்கூடிய இந்தக் குறைபாடு சிறுவர்களிடையே அதிகம் காண முடியும் ஆனால்இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. குழந்தைகளுக்கு போய்சர்க்கரை நோய்வருமா ? என்றசிந்தனை பலரிடம் இருக்கிறது.குழந்தைகளுக்கும் வரலாம் என்பதுதான் அறிவியல் சொல்லும் உண்மை, என்றார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

டைப்-1 சர்க்கரை நோயின் அறிகுறிகள்: குழந்தைகள் வழக்கத்தை விடஅதிகமாக தண்ணீர் தாகம் ஏற்படுகிறது என்றுகூறினால், பலமுறை சிறுநீர் கழித்தால், அதிகமாக பசி ஏற்படுவதாக கூறினால், உடல் எடையை உடல்உழைப்பு இல்லாமல் இழந்தால், சோர்வாக காணப்பட்டால், கண் பார்வை மங்கலாக இருப்பதாக கூறினால் காலம்தாழ்த்தாமல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆய்வுசெய்ய வேண்டும். இவையும் டைப் 1 சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். ஒரு வேளைகுழந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்தால் அது என்னவகையான சர்க்கரை நோய் என்பதை கண்டறிய HPA1C என்ற சோதனையையும் C-peptide சோதனையையும் செய்து கொள்ள மருத்துவர்கள் கூறுவார்கள்.  டைப் 1 சர்க்கரை நோய் தானாஎன்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். குழந்தைகளின் உடலில் சர்க்கரை நோய் இருப்பதை சரிவர கண்டறியாமல் இருப்பதால் அவர்களுடைய இதயத்துடிப்பில் பிரச்சனைகளும் சிறுநீரக செயல்பாடுகளில் பிரச்சனைகளும் சீக்கிரம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சர்க்கரை நோய்இருப்பதை முடிந்தவரை குழந்தைகள் சோர்வாக காணும் ஆரம்ப நாட்களிலேயே செய்து கொள்ள வேண்டும்,” என்றார்.

இந்த ஆண்டு உலகசர்க்கரை நோய்தினத்தை முன்னிட்டு ஏ.ஜிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் டைப் 1 சர்க்கரை நோய் இருப்பதை  மூலமாக ஊர்ஜிதப்படுத்தி வரக்கூடிய நபர்களுக்கு உடலின் ரத்த அளவை அவ்வப்போது நாமே அறிந்து கொள்ளக்கூடிய குளுக்கோ மீட்டர் கருவியுடன் அதற்கான 25 ஸ்ட்ரிப்ஸ்  இலவசமாக வழங்கஇருக்கின்றனர்.

மேலும் இந்த வாரம்முழுவதும் (நவம்பர் 14- 19)சர்க்கரை நோயின் அறிகுறிகளோடு யார் வந்தாலும் அவர்களுக்கு இலவச பரிசோதனைகளையும் வழங்க இருக்கின்றனர். அத்துடன் டைப் 1 சர்க்கரை நோய் இருக்கும் குழந்தைகள் எப்படிப்பட்ட உணவை உண்ணவேண்டும் எப்போது அவர்கள் ரத்த அளவை கண்காணிக்க வேண்டும் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்பட்டால் விரைந்து செயல்பட வேண்டும் என்கின்ற விழிப்புணர்வையும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த உள்ளனர்.

அமெரிக்காவில் டைப்1 சர்க்கரை நோய் பிரச்சனையுடையவர்களை 80ல் இருந்து 90 % ஆரம்பகட்டங்களில் அங்குசெய்யக்கூடிய பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் ஆரம்ப நாட்களில் இருந்தே வழங்கப்படுகிறது. ஆனால்நம் நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு இல்லை இதை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முயற்சி.” என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp