தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின்பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ். ஆர். இராஜா அவர்கள் கோவை மாநகராட்சி 86வது வார்டில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தை இன்று ஆய்வு செய்யவந்தார்.
ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜீ.எஸ். சமீரன் அவர்கள். கோவை மாநகர மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார் அவர்கள். துணை மேயர் திரு வெற்றிச்செல்வன் அவர்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் மருத்துவர் சர்மிளா அவர்கள்.
தெற்கு மண்டல தலைவர் திருமதி தனலட்சுமி அவர்கள். தெற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு அண்ணாதுரை அவர்கள். மண்டல செயற் பொறியாளர் கருப்புசாமி அவர்கள். மண்டல சுகாதார அலுவலர் திரு ராமு அவர்கள். வார்டு சுகாதார ஆய்வாளர் தனபால் அவர்கள்.வார்டு சூப்பர்வைசர் மணிகண்டன் அவர்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC அவர்கள்.ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன், துணை செயலாளர் அசாருதீன், மொய்தீன் சேட் ஆகியோர் 86வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கு குழு தலைவர் திரு எஸ். ஆர்.இராஜா அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.