வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் 23.7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தாயார் நிலையில் இருக்க வேண்டும்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வரும் நவம்பர் 12 ஆம் தேதி வரை வடமேற்கு திசையில், தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களிலும், 10 ஆம் தேதி அனேக இடங்களிலும், 11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்த வரையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யக்கூடும். 13 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 12 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் 12 ஆம் தேதி வரை அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாக லேசான மழை மட்டுமே பெய்து வருகிறது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
கன மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று கடலுக்குச் சென்ற மீனவர்களை விரைந்து கரைக்கு வருமாறும், கடலில் தங்கி மீன்பிடித்து வருபவர்களை உடனடியாக கரை திரும்புமாறும் மீன்வளத் துறை அதிகாரிகள் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் அந்தந்த படகுகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.