தூத்துக்குடி மாநகராட்சியில் மழைவெள்ளம்! அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு !!!

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைவெள்ளம் பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு !!!

கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர் மேயர் கண்காணித்து வருகின்றனர்.

50வது வார்டு என்ஜிஓ காலணி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதிசபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் சாலையை உயர்த்துவது மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

– வேல்முருகன் தூத்துக்குடி .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp