தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பொதுமக்களிடம் பரவி வருவதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். தூத்துக்குடியில் கடந்த மாதங்களில் மெட்ராஸ் – ஐ’ என்னும் கண் நோய் கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடமும் பரவி வருகிறது. இந்த நோய் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய்ப்பாதிப்பாகும். இந்த நோய் இருந்தால் மற்ற மாணவ மாணவியர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.