தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஆனைமலை வி.ஆர்.டி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்…!!!
55 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஆனைமலை கிளை நூலகம் மற்றும் ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ஆனைமலை வி ஆர் டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஸ்ரீதேவி கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடையே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பற்றி கூறினார். அதனை அடுத்து ஆனைமலை சுகாதார ஆய்வாளர் செல்லதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் நூலக வார விழா கொண்டாடுதல் பொருட்டு மாணவிகளுக்கு புத்தகம் வாசித்தல் தொடர்பாக பல்வேறு நூல்களை ஆனைமலை கிளை நூலகர் சி மீனாகுமாரி பள்ளி மாணவிகளுக்கு நூல்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.