கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார்:
நவம்பர் 14, முதல் இந்திய பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தினம் சிறுவர்கள் தினம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மிக சிறப்பாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மற்றும் சமூக அக்கறைகளை நினைவுபடுத்தும் வகையில் நாட்டின் மிக முக்கியமான தலைவர்களின் தேசத்தில் முன்னேற்றதற்கான செயல்களில் ஈடுபட்ட திரு ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவாகவும் இவை இன்று இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மட்டுமல்லாமல் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மலா மாதா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நடனமாடியும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றியும் மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.