கேரள மாநிலம், ஆலம்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் நீலகிரிக்கு கோழிகள் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிரமாக கண்காணிக்க, நீலகிரியில் கால்நடை துறை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கேரளா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகளில் நேற்று முதல் கோழி, பிற பறவைகளை கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
அத்துடன், மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அருண்குமார் கிணத்துக்கடவு.