கோவை மாவட்டம் பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பிரிவு அருகே கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்ற வாலிபரை பொள்ளாச்சி காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர், அப்பொழுது அவர் வைத்திருந்த பையில் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர்
மேலும் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் BA எக்னாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் சூரியபிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது பேருந்து நிறுத்தத்தில் சந்தேகம் படும்படியாக நின்றிருந்த மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 500 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பின்பு கஞ்சாவை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.