கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டி
ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் கற்பக விநாயகர் நகர் வீதி ரோடு சேரும் சகதியுமாய் மக்கள் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது.
இப்பகுதி பொதுமக்கள் இவ் வழித்தடத்தில் பயணிக்கும் பொழுது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆகையால் மக்கள் நலனில் அக்கறை கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.