கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியரிடையே போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள் பற்றியும், போலீசாரின் பணிகள் குறித்தும், பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கோவை மாவட்ட காவல்துறையினர் சார்பாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் வால்பாறை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார காவல் ஆய்வாளர் ஆகியோரின் வழிகாட்டுதல் படி ஆனைமலை காவல் நிலையத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள் பற்றியும், போலீசாரின் பணிகள் குறித்தும் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை வேட்டைக்காரன் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ் மற்றும் முருகவேல் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பேசியதாவது:-
காவல்துறை பொதுமக்களுக்கு ஆற்றும் பணிகள் பற்றியும் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, தயக்கம் இல்லாமல் புகார் செய்ய வேண்டும் மேலும்
ஒவ்வொரு மாணவர்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர் அதனை அடுத்து மாணவர்களை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அதனை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல் மாணவர்களை உதவி ஆய்வாளர் அறைக்கு அழைத்துச் சென்று அவருடைய பணியினை கூறினார். அதனை அடுத்து ஆய்வாளர் அறைக்கு அழைத்துச் சென்றார் அங்கு அவருடைய பணிகளையும் ஆய்வாளருக்குபட்ட காவல் நிலையங்களை பற்றியும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றியும் கூறினார்.
ஆர்வத்துடன் கேட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆனைமலை காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் காவலர்களின் செயல்பாடுகளை அறிந்து கொண்டதற்கு காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சதானந்தம், தலைமை காவலர் ரங்கநாதன், முஸ்தபா பெண் காவலர்கள் தீபா, பெனாசீர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாண மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.