கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட மேட்டுப்பாளையம் உக்கான் நகரை சேர்ந்த அமுதா (வயது 50) மற்றும் நாகமணி(46), ஆகிய இருவரும் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களது கையில் இருந்த கேனை பிடுங்கி இருவரது தற்கொலை முயற்சியை தடுத்தனர்.
இந்த சம்பவத்தால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.