கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி, இவரது மகன் 47 வயதான ராஜ்குமார். இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக சிங்காநல்லூர் , ராவுத்தூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதத்தில் ராவுத்தூர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சையின் போது அவரது வலது கையில் இருந்த மோதிரம் காணாமல் போனது, இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து ராஜ்குமார் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.