சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் செலகரச்சல் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் விழுந்தது. இதுகுறித்து மின்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மின்சாரத்தைத் துண்டித்தனர். இதனால் எந்த வித அசம்பாவிதமும் அங்கு ஏற்படவில்லை.
இதனையடுத்து செலக்கரைச்சல் மின்வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விபத்தினால் மின்வாரியத்திற்கு ரூ. 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.