கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்துள்ள கரிமன்னூர் மற்றும் வண்ணபுரம் போன்ற பஞ்சாயத்துகளில் கடந்த சில தினங்களாகவே பன்றிகள் நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளன. சில தினங்களில் இதுவரையிலும் 46 பன்றிகள் நோய் தாக்கப்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் நிலை உள்ளதா என்பதை ஆராய விலங்குகள் பாதுகாப்புத் துறையின் சார்பாக விலங்கினங்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் அமைந்திருக்கும் இந்திய தெற்கு நோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரத்த மாதிரியின் முடிவை வைத்தே பன்றிக்காய்ச்சல் பரவுகிறதா என்பதை தீர்மானிக்க முடியும் அது மட்டுமல்லாமல் கரிமண்ணூர் பஞ்சாயத்தில் தான் கேரளாவில் முதன் முதலாக ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்பொழுது இந்த இரண்டு பஞ்சாயத்துகளை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 7 பண்ணைகளை கண்டறிந்து அங்குள்ள நோய் பாதிப்படைந்த பன்றிகளை கொள்ள ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற்று நவம்பர் 9-ம் தேதி இதனுடைய நடவடிக்கைகளை விலங்குபாதுகாப்பு துறை மேற்கொண்டது. அது மட்டுமல்லாமல் பண்ணையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து மக்களுக்கும் பன்றி காய்ச்சல் உள்ளதா என்பதை ஆராய்ந்து கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன். மூணார்.