கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் கடந்த மூன்று நாட்களாக துணைக் கல்வி மாவட்டம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் அந்தப் பகுதியில் உள்ள மூணார் காந்தளூர் வட்டவடை மறையூர் பள்ளிவாசல் மற்றும் சின்னகாணல் மாங்குளம் போன்ற 77 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
சுமார் 70 பிரிவுகளில் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது. இதனை மூணார் பஞ்சாயத்து தலைவர் பிரவீனா ரவிக்குமார் துவக்கி துவக்கி வைத்தார். மூன்றாவது நாளான இன்று மூணார் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் A ராஜா அவர்களால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டுகளும் வழங்கப்பட்டன. மூணார் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தை தட்டி சென்றனர்.
இதில் சின்ன கானல் பாத்திமா மாதா உயர்நிலைப்பள்ளி 209 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.