கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி உட்பட்ட மைதானத்தை சீர்படுத்தப்பட வேண்டும், நகராட்சி மைதானத்தை நகராட்சி நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும், பதிவு பெறாத அமைப்புக்களின் குத்தகை கோரிக்கைகளை புறம் தள்ளி வால்பாறை மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டு மைதானமான நகராட்சி மைதானத்தை தொடர்ந்து நகராட்சியின் கட்டுப்பாட்டிலே வைத்திருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட பதிவுடன் இருக்கக்கூடிய அமைப்பான வால்பாறை கால்பந்து சங்கத்தின் விளையாட்டு திட்டங்களுக்கு நகராட்சி நிர்வாகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் அவரிடம் கோரிக்கை மனுவை வால்பாறை கால்பந்து சங்க தலைவர் பிரமேஸ் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் செயலாளர் ராஜேஷ், இணைத் தலைவர் சதீஷ், துணைச் செயலாளர் அனிஷ், ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி,துணைச் செயலாளர் ஆண்ட்ரூஸ், பொருளாளர் ராஜேஷ் மற்றும் உறுப்பினர்கள் லோகேஷ்,சரவணன், மணிகண்டன், சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.