மிக நீண்ட நாள்களாக தீர்க்கப்படாத பிரச்சினை மக்கள் பலமுறை நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலந்தபட்டி கிராமத்தில் நிரந்தர ரேஷன் கடை அமைக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே இலந்தபட்டி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் 2019ஆம் ஆண்டு முதல் குருவி நத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இலந்தபட்டி கிராமத்தில் சுமார் 270 ரேஷன் கார்டுதார்கள் உள்ளனர். அவர்களுக்கு முறையாக பொருட்கள் வரவில்லை. எனவே அப்பகுதியில் நிரந்தர நியாய விலை கடை அமைக்க வேண்டும், முறையாக பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்தனர்.
மேலும் கோரிக்களை அரசு ஏற்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என்று கிராம மக்கள் பல தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.