கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் வால்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு காவல் நிலையத்தின் செயல்பாடு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. காவல்துறை ஆய்வாளர் கற்பகம் மற்றும் பிரபாகரன் முன்னிலையில் அன்றாட நடவடிக்கைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரின் செயல்பாடு பற்றி தெரிந்து கொண்டனர்.
காவல் ஆய்வாளர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த காட்சி நல்வழியில் நடப்பதற்கான ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது.
பள்ளியில் படிக்கும்போதே இளம் வயதினர் ஒழுக்க சிந்தனையுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் செயல்பட இந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.