கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. வீரமணி, சேர்மன் அழகு சுந்தரவல்லி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களும் இந்நிகழ்வை அறிந்த அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் அப்பகுதி கவுன்சிலருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இரண்டு இன்று திறப்பு விழா கண்டது என்பது கூடுதல் தகவல்.
-M.சுரேஷ்குமார்.