கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிகளில் தற்பொழுது வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக மிகவும் அதிகமான மழை பெய்து கொண்டிருக்கிறது இதில் தற்பொழுது மூணார் அடுத்துள்ள குண்டலை பகுதியில் உள்ள புதுக்கடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன மற்றும் சுற்றுலாவிற்கு கோழிக்கோட்டில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
அடித்துச் செல்லப்பட்ட வாகனத்தை அங்கு அருகில் இருந்தவர்கள் மீட்டு அதனை அதில் தேடிப் பார்த்த பொழுது அதில் யாரும் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது அவர்களை குறித்த தகவல்களும் ஒன்றும் தெரியவில்லை மற்றும் அப்பகுதியில் இந்த வாகனத்தில் வந்தவர்களை அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர்.
அதிகமான மழை பெய்வதால் மூணார் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.