கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து அதிகம் துற்நாற்றம் வீசுவதாகவும் ,, இதனால் காய்ச்சல் உடல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அருகில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார் அளித்ததை அடுத்து,99 வார்டு மாமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் ஸ்ரீ ராம் நகர் பகுதியில் காய்ச்சல் தடுப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமினை 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு அஸ்லாம் பாஷா அவர்கள் தொடங்கி வைத்தார்.
நகர சுகாதார அதிகாரி (CHO) அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அவர்களுடன் மருத்துவ குழு மாநகராட்சி செவிலியர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டனர் மற்றும் நிகழ்ச்சியில் 99 ஆவது வட்ட கழக செயலாளர் முரளிதரன், முகமது ஜின்னா, அவை தலைவர் சம்சுதீன், வட்டக் கழகப் பிரதிநிதி சக்திவேல், துணைச் செயலாளர் ஷாஜகான் சாதிக் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பட்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.