திருச்செந்தூரில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு 25 பவுன் நகையுடன் இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர். சினிமா மிஞ்சியது இந்த சம்பவம். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் டேவிட்ராஜாமணி (40). கோவையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி அமுதா (35). இவர்களுக்கு காபிரியேல் (10), யாழினி மரியாள் (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் டேவிட் ராஜாமணியின் தந்தை ஜோசப் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி ஜோசப் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். வீட்டுக்கு அவர் திரும்பி வந்தபோது குழந்தைகளை விட்டு விட்டு ரதி அமுதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.
மேலும் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளையும் அவர், எடுத்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டேவிட்ராஜாமணி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரதி அமுதாவை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.