கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானம் பகுதிக்குட்பட்ட தெருவில் நேற்று சென்றவர்களை நாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் உட்பட மாலை வரை எட்டு நபர்களுக்கு மேல் இந்நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்கள் பயனீர் மில் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். பீளமேடு பகுதியில் சுற்றித்திரியும் இந்த நாய் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.