மொபைல் யூஸர்கள் ஸ்பேம் கால்ஸ்களின் பிரச்சனையில் இருந்து விடுபடும் வகையில் புதிய அம்சம் ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் டெலிகாம் ரெகுலேட்டரான டிராய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Trai அடுத்த மூன்று வாரங்களுக்குள் KYC மூலம் சரிபார்க்கப்பட்ட மொபைல் ஃபோன் காலர் ஐடென்டிட்டி சிஸ்டமை வெளியிட உள்ளது.
Trai வெளியிட உள்ள இந்த புதிய அம்சம் மூலம் உங்கள் மொபைலுக்கு சேமிக்கப்படாத நம்பரிலிருந்து கால்ஸ் வரும் போது, அந்த கால் செய்பவரின் பெயர் ஸ்கிரீனில் தோன்றும். இந்த அம்சம் செயல்பட KYC உதவுகிறது. எப்படி என்றால் ஒருவர் சிம் கார்டை வாங்கும் போது நிரப்பப்ட்ட அல்லது நிரப்பப்படும் படிவத்தில் யாருடைய பெயர் கொடுக்கப்படுகிறதோ கார்டு யாருடைய பெயரில் வாங்கப்படுகிறதோ அந்த நபரின் பெயர் மொபைல் ஸ்கிரீனில் தோன்றும். இந்த புதிய அம்சத்தால் ஸ்பேம் கால்ஸ் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். பிரபலமான Truecaller ஆப்-ற்கு மாற்றாக அரசு சார்பில் இந்த காலர் ஐடி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ. வடசென்னை.