கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், இ. கா. ப. , அவர்கள் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடமான சந்தைப்பேட்டை விநாயகர் கோயில் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் நடராஜ்(51) மற்றும் ஆறுமுகம் என்பவரது மகன் நாகராஜ்(42) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், கைபேசி-1மற்றும் ரூபாய் 1600/- ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் என்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.