இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் ஆட்டம் இன்று புதன்கிழமை டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு நடக்கிறது.
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.