முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அதிமுக சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் காவல் தெய்வம்,மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 6வது நினைவு நாள்.
கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க கழக அமைப்பு செயலாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ அவர்களின் வழிகாட்டுதலின் படி ., ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு. P.மோகன்B.Sc.,Ex MLA அவர்களின் தலைமையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு பூமாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.