காங்கிரஸ் சிறுபான்மை துறையின் சார்பாக போத்தனூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக கோவை தெற்கு மாவட்டம் சிறுபான்மை துறையின் சார்பாக, கிறிஸ்துமஸ் விழா மற்றும் குறிச்சி சர்க்கிள் சிறுபான்மை துறை நிர்வாகிகள் நியமன கூட்டம், நேற்று மாலை போத்தனூர் பிஷப் அம்ப்ரோஸ் ஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் M. முகம்மது ஹாரூன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் A.முகம்மது இஸ்மாயில் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, கோவை தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி, தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுசூதனன், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் VC. முருகன், திருநகர் மணி, தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் உதயகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுப்புலட்சுமி , மாவட்ட நிர்வாகிகள் பத்ரகிரி, மோகன் ராஜ், கருணை மகாலிங்கம், மாச்சம்பாளையம் மோகன் குமார் கண்ணாடி கடை அஸ்லாம் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சர்க்கிள் மற்றும் டிவிஷன் நிர்வாகிகள்:
டைலர் நடராஜ், நாட்ராயன், சேகர், நாகராஜ், கருப்பசாமி, ஜெகநாதன், ராஜா.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குறிச்சி சர்க்கிள் மைனாரிட்டி துறை நிர்வாகிகள்:
தலைவர் – முகமது ஈசா
பொதுச் செயலாளர் – தனபால்
பொருளாளர் பேராசிரியர் – சையது ஹாரூன்
துணைத் தலைவர் – முகமது ஜாபர்
செயலாளர்- சதாம் உசேன்
செயலாளர்- பிலால்
ஆகிய நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போத்தனூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பாதிரியார் வருகை புரிந்து கிறிஸ்மஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
நன்றி உரையை குறிச்சி சர்க்கிள் மைனாரிட்டி துறையின் தலைவர் முகமது ஈசா வழங்கி நிகழ்ச்சியை இனிதே நடத்தினார்.
கிறிஸ்துமஸ் விழா மற்றும் மைனாரிட்டி துறையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்து பங்களிப்பளித்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோபி தெற்கு மாவட்டம் மைனாரட்டி துறையின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– காதர் குறிச்சி.
மேலும் படிக்கவும் ↓