கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் மற்றும் காவல்துறையினர் காக்காபாளையம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்கு பதுக்கி கொண்டு சென்ற கோவையை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் 50 வயதான சுகந்தராஜ் என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 49 கிலோ 800 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதேபோல் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனைக்கு கொண்டு சென்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் 29 வயதான மகேஷ் குமார், என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 27 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.