குருநானக் கல்லூரியிலிருந்து ஆலந்தூர் மெட்ரோ வரை 14/12/2022 முதல் சிற்றுந்து சேவை தொடக்கம்!!
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்றுவருவதற்காக இணைப்பு சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன்படி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இன்று (14-ம் தேதி) முதல் 2 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்து சேவை திங்கள் முதல் வெள்ளி வரை ஆலந்தூரில் இருந்து காலை 5.25 மணி முதல் இரவு 8.57 மணி வரையிலும், குருநானக் கல்லூரியில் இருந்து காலை 5.55 மணி முதல் இரவு 9.29மணி வரையில் 35 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இப்பேருந்தில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.