கோவையை பார்வையிட வந்த மாணவர்கள்… வரவேற்ற ஆட்சியர்..! மகிழ்ச்சியில் மாணவர்கள்..
கோவையை பார்வையிட வந்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் வரவேற்றனர்.
Rain Drops NGO சார்பில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் திருநங்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் திருநங்கைகள் கோவை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம், பூங்கா ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த வரவேற்பு நிகழ்வின் போது கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூமா மற்றும் NGO நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர். நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் மாணவர்களுடன் வருகை புரிந்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-சீனி போத்தனூர்.