கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் ஜி எஸ் சமீரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, மற்றும் ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழு கரும்பு, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, கோவை மாவட்டத்தில் அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்கள், மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன், 3/1/2023 அன்று முதல் 8/ 1/2023, வரை குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில், சுழற்சி முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகப்பு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.