சிதிலமடைந்து காணப்படும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு கட்டிடங்கள்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தேயிலை தோட்டம், ஏலம் மற்றும் காபி தோட்டங்கள், ஹரிச்சன்ஸ் மலையாளம் நிறுவனம், டாட்டா நிறுவனம், கண்ணன் தேவன் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்களால் நிர்வகித்து நடத்தப்பட்டு வருகின்றன.
1879 முதலாக இங்கு தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் 1960 ஆம் ஆண்டுக்கு மேல் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தங்க கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டு வந்தது வழக்கம். இந்த தனியார் நிறுவனங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் கொடுத்தால் கூட குடியிருப்பு வசதிகள் மிகவும் சரியாக பராமரிப்பு செய்து கொடுத்து வந்தனர் ஆனால் 2000 ஆண்டுக்கு பின்னர் தனியார் நிறுவனங்களின் புதிய தலைமுறைகள் நிறுவனங்களை நிர்வாகிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட பொழுது அவர்கள் குடியிருப்பு பகுதி ஆனது பராமரிக்க படவே இல்லை. குறிப்பாக ஹரிச்சன்ஸ் மலையாளம் தனியார் நிறுவனம் மக்களின் வாழ்வை பற்றி கவலைப்படுவதே இல்லை. தொழிலாளர்களின் பிரச்சனையை நிறுவனத்திடம் வைக்கும் பொழுது மிகவும் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இடிந்து போன பராமரிக்கப்படாத வீடுகளிலேயே மக்கள் வசித்து அதே தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். அதே தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருவதால் மக்கள் தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை மட்டுமே வைக்க முடிகிறது.இதில் 5 வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகளும் இடைபட்டு இதனை சரி செய்ய முன்வரவில்லை. நிறுவனங்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறும் பொழுது நிறுவனங்கள் மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலையில் செயல்படுவதாகவும் இதனால் பராமரிப்பு செய்ய முடியாது எனவும் மறுத்து விடுகின்றனர். இதில் இனியும் கேரளா அரசு கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தால் இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்.
அதிகமான லாபத்தை பெறும் தனியார் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும், தொடர்ந்து பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் நல்ல வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவே இதில் அரசு உடனடியாக தலையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.